டில்லியில் வேலைக்காரச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

Image caption வேலைக்காரச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

இந்தியத் தலைநகர் டில்லியில் வேலைக்காரியாகப் பணி புரிந்து கொண்டிருந்த பதின்பருவப் பெண் ஒருத்தி உடலில் கத்திக் காயங்கள் மற்றும் நாய்க் கடி காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவளை வேலைக்கமர்த்தியிருந்த வீட்டு உரிமையாளரை போலிசார் கைது செய்து, தாக்கியது மற்றும் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளில் அவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

மத்திய தர வர்க்க குடியிருப்புப்பகுதி ஒன்றிலிருந்து இந்தப் பெண்ணை மீட்ட தொண்டு நிறுவன ஊழியர், குழந்தைகளை மீட்டெடுக்கும் தனது பல ஆண்டுகால சேவையில், இது போன்ற ஒரு மோசமான வன்முறையை தான் பார்த்ததே இல்லை என்று கூறினார்.

இந்தப் பெண் தலை, முகம் மற்றும் முதுகில் தாக்கப்பட்டிருந்தாள்.

15 வயதானவளாகக் கருதப்படும் இந்தப் பெண் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவள்.

இந்தியாவில் பெரும்பாலும் வறிய பகுதிகளிலிருந்து வரும் வீட்டு வேலைப்பணியாளர்கள் எதிர்கொள்ளும் மோசமான துஷ்பிரயோகத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.