'காஷ்மீரில் கடுமையான மோதல்' - இந்திய இராணுவத் தளபதி

இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிக்ரம் சிங்
Image caption இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிக்ரம் சிங்

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில், இந்தியப் படையினர், பாகிஸ்தானிய ஆதரவுடனான தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்டு வருவதாக இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய இந்தப் பிராந்தியத்தை பிரிக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டின் இந்தியப் பகுதிக்கு, பாகிஸ்தானிய பகுதியில் இருந்து பயங்கரமான ஆயுதங்களைத் தாங்கிய டசின் கணக்கான தீவிரவாதிகள் ஊடுருவியதை அடுத்து, இந்தச் சண்டை 10 நாட்களுக்கு முன்னர் ஆரம்பமானதாக அவர் கூறியுள்ளார்.

தீவிரவாதிகள் அனைத்துப் பக்கத்திலும் சுற்றிவளைக்கப்படுள்ளதாகவும் இந்தியத் தளபதி கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் தமக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று பாகிஸ்தான் மறுக்கிறது.