ஈரோட்டில் இன்றும் இருக்கிறதா கொத்தடிமை முறை?

ஈரோடு மாவட்டத்தின் ஒரு பஞ்சாலையில் வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்து இளம் பெண்கள் கொத்தடிமைகளாக பணிபுரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவலை அடுத்து அந்த ஆலை சோதனையிடப்பட்டு 47 பெண்கள் அரசு அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக செய்திகள் வந்தன.

இந்த சோதனையில் அதிகாரிகளுடன் சென்ற உள்ளூர் தன்னார்வ அமைப்பான விழுதுகள் என்ற அமைப்பின் இயக்குநர் எம்.தங்கவேல், இந்த பெண்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதாக பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆனால் மீட்கப்பட்ட பெண்கள் யாரும் கொத்தடிமைகளாக நடத்தப்படவில்லை என்கிறார் தமிழக நூற்பாலைகள் சங்கத்தின் பிரதான ஆலோசகர் டாக்டர் கே.வெங்கடாசலம். அவர்களுக்கு முறையான மாத சம்பளம் கொடுக்கப்பட்டதுடன், பாதுகாப்பான தங்குமிட வசதிகளும் செய்து தரப்பட்டதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் அவர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை