24 வருடங்களுக்கு பின்னர் குடும்பத்துடன் இணைந்த பொலிஸ்காரர்

Image caption தாயின் பெயரை கையில் பச்சைக் குத்தியிருந்த கணேஷ்

இந்தியாவின் மும்பை நகரத்தை சேர்ந்த பொலிஸ்காரர் ஒருவர் நெரிசல் மிக்க ரயில் நிலையம் ஒன்றில் 24 வருடங்களுக்கு முன்னர் தன்னை பிரிந்த குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்திருக்கிறார்.

அவரது கையில் குத்தியிருந்த பச்சையே அவரை குடும்பத்துடன் மீண்டும் இணைத்துள்ளது.

ஒரு ரயிலில் ஏறும் தருணத்தில் தனது பெற்றொரிடம் இருந்து பிரிந்தபோது கணேஸ் ரகுநாத் தாங்கடே என்ற இந்த பொலிஸ்காரருக்கு 6 வயது மாத்திரமே.

பின்னர் ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்து, பொலிஸ் அதிகாரியான அவர், பின்னர் தனது குடும்பத்தைத் தேடத்தொடங்கினார்.

தனது வலது கையில் பச்சை குத்தப்பட்டிருந்த அவரது அம்மாவின் பெயரான ''மண்டா'' என்பதுதான் அவருக்கு இருந்த ஒரே ஆதாரம்.

அவரது தேடல் இறுதியாக ஒரு வயோதிப பெண்ணின் வீட்டுக்கு அவரைக் கொண்டு சென்றது. அந்த பச்சை குத்தப்பட்டிருந்த பெயரைச் சொன்னவுடன் அந்தப் பெண் உடைந்து அழுதுவிட்டார். அதுதான் அவரது தாய்...