மங்கள்யான் நவம்பர் 5-ம் தேதி செவ்வாய்க் கிரகம் நோக்கி ஏவப்படும்

செவ்வாய்க் கிரகத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பவுள்ள மங்கள்யான் என்ற விண்கலன் நவம்பர் 5-ம் நாள் விண்ணில் ஏவப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

நவம்பர் 5-ம் திகதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்திய நேரப்படி மாலை 3.28க்கு விண்ணில் மங்கள்யான் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தான் இந்தியாவின் முதல் வேற்றுக்கிரக ஆராய்ச்சி முயற்சி.

இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன், என்ற இந்த மங்கள்யான் கலன் விண்ணில் ஏவப்படவுள்ளது.