இந்தியப் பங்குச் சந்தையில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம்

Image caption இந்தியா பொருளாதார நெருக்கடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக எச்சரிக்கைகள் இருந்துவரும் நிலையில் இந்த பங்குச் சந்தை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தையான பிஎஸ்இ (பாம்பே ஸ்டாக் எக்ஸேஞ்) முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வைக் காட்டியுள்ளது.

இந்தியாவின் வங்கித் துறையிலும் வாகனத் தயாரிப்பு உள்ளிட்ட மற்ற சில துறைகளிலும் பெருமளவான வெளிநாட்டு நிதியை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் பலனாக இந்த பங்குச்சந்தை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக இந்திய ரூபாய் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துவந்தது.

நாடு கிட்டத்தட்ட ஒரு பொருளாதார நெருக்கடியை நெருங்கிவிட்டதாக கடந்த சில மாதங்களில் எச்சரிக்கைகள் வெளிப்பட்டிருந்த நிலையில் இந்த சாதகமான அறிகுறி தென்பட்டுள்ளது.

அமெரிக்கா அதன் பொருளாதார ஊக்குவிப்புக்கான நிதி ஒதுக்குதலை குறைக்கும் தனது திட்டத்தை சற்று தாமதப்படுத்த எடுத்துள்ள முடிவு இந்திய பங்குச் சந்தையில் நல்ல பலனைக் காட்டியுள்ளது.

இந்தியாவின் மத்திய வங்கியும் நாட்டின் நாணயத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளமையும் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால், இந்தியப் பொருளாதாரம் இன்னும் பலவீனமான நிலையிலேயே காணப்படுகிறது.

உள்நாட்டு தொழிற்சாலைகளின் உற்பத்தி குறைந்துள்ளமையும் பணவீக்கம் அதிகரித்துள்ளமையும் இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.