இந்தியாவின் மங்கள்யான் வெற்றிகரமாக ஏவப்பட்டது

செவ்வாய் கிரகத்தை நோக்கிய விண்வெளிப் பயணத்தை இந்தியா துவக்கியுள்ளது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பி எஸ் எல் வி ராக்கெட், மங்கள்யான் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை ஆராயும் கலன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட் ஏவுதளத்தில் சற்றே மேக மூட்டம் காணப்பட்டது. குறித்த நேரத்தில் ராக்கெட் விண்ணில் கிளம்பிச் சென்றபோது விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கூடியிருந்த விஞ்ஞானிகளும் மற்றவர்களும் கரகோஷம் எழுப்பினர்.

பி எஸ் எல் வி ராக்கெட் மங்கள்யான் கலத்தை புவியின் நீள் வட்டப் பாதைக்கு எடு்த்துச் சென்றுள்ளது.

அடுத்த இரு வாரங்களில் இந்த கலனின் வட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்படும்.

வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வாக்கில் இந்தக் கலன் புவி ஈர்ப்பு விசையை உடைத்து வெளியேறி செவ்வாய் நோக்கிய தனது நீண்ட பயணத்தை துவக்கும்.

அந்த நீண்ட பயணத்தின் போதே இதற்கு முன்பு பிற நாடுகள் எடுத்த முயற்சிகள் பலவற்றில் பின்னடைவு ஏற்படடுள்ளது.

திட்டமிட்டபடி எல்லாம் சரியாகச் சென்றால் அடுத்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதியன்று இந்தக் கலன் செவ்வாய் கிரகத்தை அடையும்.

செவ்வாய் கிரத்தை சென்றடையும் திறன் இந்தியாவுக்கு உள்ளதா என்பதையும், அந்தக் கிரகத்தில் மீதேன் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதுமே இந்த திட்டத்தி்ன் முக்கிய நோக்கங்கள்.

இந்திய சூரியனை ஆய்வு செய்யவும், எரிகல்லை ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளது. ஆனால் மனிதர்களை விண்வெளி ஆய்வுக்கு அனுப்புவது குறித்து இதுவரை உறுதியான முடிவு எடுக்கவில்லை.