ஏ.டி.எம்மில் பணம் எடுத்த பெண் மீது தாக்குதல்

Image caption ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த பெண் மீது தாக்குதல்

இந்தியாவின், பெங்களூருவில் பாதுகாவலர் இல்லாத ஒரு ஏடிம் மையத்தில் பணம் எடுக்க வந்த ஒரு பெண் , பணம் கொள்ளையடிக்க வந்த ஒரு நபரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காணொளி , ஊடகங்களிலும், சமூக வலை தளங்களிலும் பரவிவருகின்றது.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த பெண்ணின் வலது பக்கம் செயலிழந்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 38 வயதான தனியார் வங்கியில் வேலை செய்யும் இந்த பெண் தாக்கப்பட்ட சில மணி நேரங்களுக்கு பின்னரே கண்டறியப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு நேற்று நீண்ட நேர அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது என்று மருத்துவர் என்.கே.வெங்கட்ரமணா தெரிவித்தார். மேலும் அவரது தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அது அவரது மூளையைத் தாக்கி அவரது வலது பக்கத்தை செயலிழக்க செய்துள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

ஆயுதங்கள் கொண்டு அந்த பெண்னை தாக்கிய நபரை மும்முரமாக காவல் துறையினர் அருகில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் தேடி வருவதாக காவல் துறை ஆணையர் ராகவேந்திரா ஆருத்கார் தெரிவித்தார்.