இடிந்தகரை குண்டு வெடிப்பு: ஆறு பேர் பலி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழ்நாட்டில் கூடங்குளம் அணு உலைக்கு அருகே உள்ள, இடிந்தகரை சுனாமி காலனியில் உள்ள ஒரு வீட்டில் குண்டு வெடித்ததில் ஆறு பேர் பலியாகியுள்ளனர்.

அணு உலையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடிந்தகரை சுனாமி காலனியில் உள்ள ஒரு குடிசையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் சில நபர்கள் வெடி மருந்துகள் தயாரித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக இந்த நாட்டு வெடி குண்டு வெடித்ததாக, புது தில்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.

Image caption இடிந்த கட்டிடம்

5 வயதிற்கு உட்பட்ட 3 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட 6 பேர் பலியாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். குண்டு வெடிப்பில் இரண்டு வீடுகள் தரைமட்டமாகின. உடனடியாக மீட்பு குழுக்கள் அங்கு விரைந்து சென்றனர்.

மேலும் உயர் காவல் அதிகாரிகள் சுமித் சரன் மற்றும் விஜேந்திரா பிதாரி தலைமையிலான வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

அணு உலை எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக செயல்பட்டுவருவதாக அணுசக்தித் துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.