டில்லி தேர்தல்; வாக்குப்பதிவு தொடங்கியது

Image caption டில்லியில் வாக்குப்பதிவு தொடங்கியது

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது.

அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாக இந்த சட்டப்பேரவைத் தேர்தல் கருதப்படுகின்றது. முதல் முறையாக தங்களின் வேட்பாளரைகளைக் களத்தில் இறக்கியுள்ள, ஊழலுக்கு எதிரான கட்சியாக கூறப்படும் ஆம் ஆத்மி கட்சியின் மீது பலரின் கவனம் அமைந்துள்ளது.

கருத்து்க் கணிப்புகளில் இந்த கட்சி ஏற்ற இறக்கங்களை கண்டாலும், இது ஒரு பெரும் சக்தியாக உருவாகலாம் என்று சிலர் தெரிவிக்கின்றனர். தற்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ், டெல்லியில் தொடர்ந்து நான்காவது முறை வெற்றியை எதிர்ப்பார்க்கின்றது. எதிர்க்கட்சி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டுள்ள, குஜராத் முதல்வர், நரேந்திர மோதிக்கு இந்த வாக்குப்பதிவு ஒரு சோதனையாக பார்க்கப்படுகின்றது.