மிசோரம் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

மிசோரம் சட்டசபையில் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றுள்ளது
Image caption மிசோரம் சட்டசபையில் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றுள்ளது

இந்தியாவில் வட கிழக்கேயுள்ள மிசோரம் மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9 ஆம தேதி காலை 8 மணி அளவில் மிசோரத்தில் உள்ள 40 தொகுதிகளில் துவங்கியது. வாக்கு எண்ணிக்கை இரவு நேரமாகியும் நடைபெற்றுவருகிறது. இதுவரை அதிகார்வபூர்வமாக வெற்றி அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளை வென்று அரும் பெரும்பான்மை கைப்பற்றியுள்ளது. மிசோரத்தில் ஆட்சி அமைக்க 20 தொகுதிகள் வென்றால் போதும் என்ற நிலையில் 28 தொகுதிகளை வென்றுள்ள காங்கிரஸ் கட்சியே தற்போது ஆட்சி அமைக்கும்.

காலை முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையிலிருந்தே காங்கிரஸ் கட்சிதான் முன்னணியில் இருந்து வந்தது. மிசோரத்தின் தற்போதைய முதலமைச்சரான லால் தான்காவ்லா இந்த தேர்தலில் ராங்துர்சோ மற்றும் செர்ச்சிப் அகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலுமே அவர் வெற்றி பெற்றுள்ளார். இவரே இந்த முறையும் முதலமைச்சராக பணியாற்றுவார்.

டில்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி சந்தித்த படும் தோல்வியை சந்தித்துள்ளது.