டில்லி முதல்வரானார் அரவிந்த் கேஜ்ரிவால்

Image caption பதவியேற்றார் கேஜ்ரிவால்

டில்லி மாநில முதல் அமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர், அரவிந்த் கேஜ்ரிவால், இன்று பதவியேற்றார்.

டில்லியின் ராம்லீலா மைதானத்தில் திறந்த வெளியில் நடந்த விழா ஒன்றில் அவர் டில்லி முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஊழலுக்கெதிராகப் பிரச்சாரம் செய்து டில்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்த , ஆம் ஆத்மி கட்சியின் தலைவர், கேஜ்ரிவால், பதவிப் பிரமாண வைபவத்துக்கு ரெயிலில் வந்தார்.

அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜுங் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

அவருடன் ஆறு பேர் அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.

ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தருகிறது.