கொல்கத்தா பாலியல் வல்லுறவு - சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை

பாலியல் தாக்குதல் சம்பவத்தையடுத்து கொல்கத்தாவில் பல போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன
Image caption பாலியல் தாக்குதல் சம்பவத்தையடுத்து கொல்கத்தாவில் பல போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன

கொல்கத்தா நகரில், கடந்த வருடம் டிசம்பர் 23ஆம் தேதி அன்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இளம் பெண் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு இறந்துபோன சம்பவத்தில், சிபிஐ விசாரணை கோரி அந்த பெண்ணின் பெற்றோர் தரப்பில் இன்று புது தில்லியில் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியிடம் மனு அளிக்கப்பட்டது.

கொல்கத்தாவில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அன்று இளம் பெண் ஒருவர் சில நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். பின் அந்தப் பெண் தன் குடும்பத்தினருடன் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் அளித்து திரும்பி வரும் வழியில் அதே கும்பல் அவரை கடத்திச் சென்று மீண்டும் பாலியல் வல்லுறவு செய்தது. பலத்த காயத்துடன் கண்டெடுக்கப்பட்ட அந்த பெண்ணும் அவரின் குடும்பத்தினர் பின் வேறு இடத்துக்கு மாறிச் சென்றனர்.

இதனிடயை இவர்களால்அளிக்கப்பட்ட புகார் தொடர்பில் 6 பேர் கைது செய்ய்ப்பட்டனர். பின் டிசம்பர் 23ஆம் தேதி அன்று அந்த கும்பலுடன் தொடர்புடைய ஒருவர் அந்த பெண்ணின் இல்லத்திற்கு சென்று பெண்ணை மிரட்டியதால் அவர், தனக்கு தானே தீ வைத்து கொண்டு தற்கொலைக்கு முயற்ச்சித்தார் என்று கூறப்படுகிறது. அந்த நபர் தான் தனது பெண்ணிற்கு தீ வைத்ததாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது குற்றம் சுமத்தப்பட்ட ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி செவ்வாய்கிழமை புது தில்லி வந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.