அசாமில் 5 பஸ் பயணிகள் கொலை

அசாம் பொலிஸார் படத்தின் காப்புரிமை Reuters
Image caption அசாம் பொலிஸார்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பஸ் பயணிகள் 5 பேரைத் தீவிரவாதிகள் கொன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ்ஸில் வந்த பல பயணிகளை அதிலிருந்து இறங்கச் செய்த தீவிரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.

மேலும் மூவர் இதில் காயமடைந்துள்ளனர்.

போடோலாந்தின் தேசிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த தீவிரவாதிகளினாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் கூறுகிறார்கள்.

அசாமில் உள்ள போடோ இனத்தவருக்கு தனியான மாநிலம் கோரி இவர்கள் போராடிவருகிறார்கள்.