மரண வீட்டில் நெரிசலில் சிக்கி 18 பேர் பலி

படத்தின் காப்புரிமை Getty
Image caption காலமான சையத் புர்ஹானுத்தீன்

இந்தியாவின் மும்பை நகரில் முஸ்லீம் ஆன்மீகத் தலைவர் ஒருவர் இறந்த வீட்டில் அஞ்சலி செலுத்துவோர் திரண்டபோது ஏற்பட்ட நெரிசலில் 18 பேர் பலியானர்கள்.

இந்த சம்பவத்தில் மேலும், 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

மும்பையின் முஸ்லீம் பிரிவான, தாவுதி போஹ்ரா சமுதாயத்தின் ஆன்மிகத் தலைவராகக் கருதப்படும், சையத்னா மொஹமது புர்ஹானுத்தீன், தனது 102வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார்.

படத்தின் காப்புரிமை
Image caption போஹ்ரா சமுதாயத்தினர் இந்தியாவெங்கும் சையத் புர்ஹானுத்தீனின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

இந்தச் சமுதாயம் இஸ்லாமி ஷியா மதப்பிரிவினைச் சேர்ந்தது.

அவர் உடல் வைக்கப்பட்டிருந்த அவரது இல்லத்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில், உள்ளே இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நெரிசலில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் இது போன்ற ஜன நெரிசல் சம்பவங்களில் மக்கள் இறப்பது அடிக்கடி நடக்கும் சம்பவமாக மாறியிருக்கிறது.