சஷி தரூர் நெஞ்சு வலியுடன் மருத்துவமனையில் அனுமதி

படத்தின் காப்புரிமை AFP
Image caption இறந்து கிடந்த சுனந்தா புஷ்கர்

இந்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சஷி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் நேற்று வெள்ளிக்கிழமை டில்லி ஹோட்டலில் இறந்து கிடந்த சம்பவத்தை அடுத்து, அமைச்சர் சஷி தரூரும், இன்று சனிக்கிழமை காலை, நெஞ்சு வலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நிலை ஸ்திரமாக இருப்பதாக மருத்துவமனைக்காகப் பேசவல்ல ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

சுனந்தா புஷ்கரின் உடல் மீது பிரேதப் பரிசோதனை ( போஸ்ட் மார்ட்டம்) நடத்தப்படவுள்ள அதே மருத்துவமனையில்தான் சஷி தரூரும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

போலிசார், சுனந்தா இறந்து கிடந்த ஹோட்டலின் பணியாளர்கள் பலரை விசாரித்து வருகிறார்கள். விசாரணைகள் தொடர்கின்றன.

துபாயில் வசித்து வந்த வர்த்தகர், சுனந்தாவை சஷி தரூர் 2010ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

சஷி தரூர், பாகிஸ்தான ஊடகவியலாளர் மெகர் தஹ்ரார் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக, புதன்கிழமையிலிருந்து , சஷி தரூரின் ட்விட்டர் கணக்கில் இருந்து தகவல்கள் பரவத்தொடங்கின.

இந்தத் தகவல்களை தான் தான் பிரசுரித்ததாக சுனந்தா ஒப்புக்கொண்டார் ஆனால் பின்னர் அதை அவர் மறுத்தார்.

அமைச்சருடன் தொடர்பு இருப்பதாக வரும் தகவல்களை மறுத்த பாகிஸ்தான ஊடகவியலாளர் தஹ்ரார், சுனந்தாவின் மரணச் செய்தி வெளிவந்தவுடன், " தான் இது குறித்து கடும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக" ட்விட்டரில் கருத்து வெளியிட்டார்.

இந்தச் செய்தி குறித்து மேலும்