டில்லி குளிரில் ஒரே நாளில் 6 பேர் மரணம்

டில்லி குளிரில் ஒரே நாளில் 6 பேர் மரணம் படத்தின் காப்புரிமை AP
Image caption டில்லி குளிரில் ஒரே நாளில் 6 பேர் மரணம்

இந்தியத் தலைநகர் டில்லியில் கடும் குளிர் காரணமாக 24 மணிநேரத்தில் வீடு இல்லாத மக்கள் 6 பேர் மரணமானது குறித்து விசாரணை நடத்துமாறு உள்ளூர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

வீடில்லாவதர்களுக்கான தங்குமிடம் ஒன்று நிரம்பி வழிந்ததால், அதிலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் சில சடலங்கள் திறந்த வெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குளிரையும் பொருட்படுத்தாது பலர் திறந்தவெளியில் இருக்க விளைவதால் இந்தப் பிரச்சினை வருவதாக டில்லிக்கான நகர அபிவிருத்தி அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால், அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தங்குமிடங்களில் போதுமான இடம் இல்லாததே இதற்கு காரணம் என்று உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.