இந்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

நடிகர் கமல்ஹாசன்
Image caption நடிகர் கமல்ஹாசன்

இந்திய அரசின் பத்மா விருதுகள் இன்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் கலைஞர் டி எச் விநாயக்ராம் ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Image caption கவிஞர் வைரமுத்து

அதேவேளை, தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ் சிவன், டாக்டர். அஜய் குமார் பரிடா, மல்லிகா சிறினிவாசன், தீபக் ரெபேக்கா பள்ளிக்கள், பேராசிரியர் ஹக்கீம் செய்யத் ஹலீஃபதுல்லா மற்றும் டாக்டர் தேனும்கல் பொலூஸ் ஜேக்கப் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தி நடிகை வித்யா பாலனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது தனக்கு அளிக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்திருக்கும் நடிகர் கமல்ஹாசன், தனக்கு இந்த விருது கிடைத்திருப்பதைப் பெரும் பேறாக கருதுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.