டில்லியில் மாணவன் மரணத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

டில்லியில் மாணவன் மரணத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் படத்தின் காப்புரிமை Justice For Nido Taniya
Image caption டில்லியில் மாணவன் மரணத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்டமை மற்றும் அதனைத் தொடர்ந்த அவரது மரணம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தியத் தலைநகர் டில்லியில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்.

20 வயதான நிடோ தானியா, சில தினங்களுக்கு முன்னதாக சில கடைக்காரர்களால், ஏளனம் செய்யப்பட்டு தாக்கப்பட்டார்.

பல மணிநேரத்தின் பின்னர் அவர் மரணமடைந்தார்.

இது தொடர்பில் இருவர் கைது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் இந்தியாவின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த பழங்குடியினச் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாதம் மற்றும் பாரபட்சம் ஆகியவற்றை கோடிட்டுக் காட்டுகின்றது.

தானியா மீதான தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க தாமதித்ததாக டில்லி பொலிஸார் மீது குற்றஞ்சாட்டப்படுகின்றது.