மோடியை சந்தித்தார் அமெரிக்க தூதர் நான்சி பவல்

படத்தின் காப்புரிமை AP
Image caption உறவு 'மலர்'கிறது ? -- மோடியுடன் அமெரிக்கத் தூதர் நான்சி பவல் சந்திப்பு

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிபெரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடியுடன் அமெரிக்காவின் உறவை பலப்படுத்தும் ஒரு முயற்சியாக இந்த சந்திப்பு பார்க்கப்படுவதாகவும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இன்று வியாழன் அன்று காலை குஜராத் தலைநகரான காந்திநகரில் உள்ள மோடியின் இல்லத்திற்கு சென்ற நான்சி பவல், பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு முன்னர் மோடியுடன் கைக்குலுக்கினார் என்று செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

நான்சி பவலும் அவருடன் வந்தவர்களும் நான்கு கார்களில் வந்தடைந்தனர். வெளியே நின்று கொண்டிருந்த செய்தியாளர்களிடம் நான்சி பவல் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்தியா-அமெரிக்கா உறவை மேம்படுத்துவதற்காக கடந்த நவம்பர் மாதம் துவங்கிய மூத்த அரசியல் மற்றும் வர்த்தகத் தலைவர்களை சந்திக்கும் முயற்சியின் ஒரு பகுதிதான் இது என்று அமெரிக்கா இந்த சந்திப்பை விவரித்துள்ளது.

மோடியின் தலைமையில் குஜராத் மாநிலம், இந்தியாவில் பொருளாதார சக்தியாக வளர்ந்துள்ளது. ஆனால் மோடி , சமூகங்களைப் பிளவுபடுத்தும் தலைவராகவும் கருதப்படுகிறார். 2002ஆம் ஆண்டு குஜராத் வன்முறை தொடர்பாக அவர் எந்த ஒரு வருத்தமோ மன்னிப்போ தெரிவித்ததில்லை.

இந்தச் செய்தி குறித்து மேலும்