இத்தாலியப் படையினர் எதிரான வழக்கில் தாமதம்; தூதரை திரும்ப அழைத்தது இத்தாலி

கொல்லம் நீதிமன்றத்தில் இத்தாலிய படையினர் (கோப்புப் படம்) படத்தின் காப்புரிமை AFP
Image caption கொல்லம் நீதிமன்றத்தில் இத்தாலிய படையினர் (கோப்புப் படம்)

இந்திய மீனவர்கள் இருவரைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இத்தாலிய மரைன்ஸ் படையினர் இருவர் மீது இந்தியாவில் சட்ட நடவடிக்கை எடுப்பதில் புதிதாக தாமதம் ஏற்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இந்தியாவில் இருந்துவந்த தனது தூதரை இத்தாலி திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது.

மரைன்ஸ் படையினர் மீது எந்தெந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது என்பதை தாம் இன்னும் முடிவுசெய்யவில்லை என இந்திய அதிகாரிகள் கூறியதை அடுத்து செவ்வாயன்று நடந்த விசாரணையை இந்திய உச்சநீதிமன்றம் ஒத்திவைக்க வேண்டி வந்தது.

2012 பிப்ரவரி மாதம் இந்தியக் கடற்கரையை ஒட்டிய கடல் பகுதியில் அந்த மீனவர்களை கடற்கொள்ளையர்கள் என தவறுதலாக நினைத்து கடற்கொள்ளை தடுப்பு அணியில் இருந்த அந்த இரண்டு படையினரும் அம்மீனவர்களை சுட்டுக்கொன்றுவிட்டனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

கடற்கொள்ளை தடுப்பு சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் இத்தாலியர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், ஆனால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என இம்மாதத்தில் முன்னதாக இந்தியா கூறியிருந்தது.

இந்தச் செய்தி குறித்து மேலும்