அதிமுக கூட்டணியில் இடதுசாரிகள் இல்லை

தமிழகத்தில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போவதில்லை என இடதுசாரி கட்சிகள் இன்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

மக்களவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அஇஅதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை துவங்காத இரண்டு இடதுசாரிக் கட்சிகளும், வியாழனன்று நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தங்களது கட்சியின் வேட்பாளர் பெயர் பட்டியலை அஇஅதிமுக அறிவித்திருந்தது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இடதுசாரி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த இறுதி பேச்சுவார்த்தையை முடித்த பின்ன,ர் இந்த பட்டியலில் மாற்றம் வரும் என இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் அப்போது பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருந்தனர்.

ஆனால் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் இதனால் அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி இல்லை என கம்யூனிஸ்ட் கட்சிகள் தீர்மானித்துள்ளதாகவும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டும் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நகர்வுகளை ஒற்றுமையாக மேற்கொள்ளும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா. பாண்டியன் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு இடம்

Image caption விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு இடம்

இதனிடையே,திமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான உடன்பாட்டில் இன்று வியாழக்கிழமை மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கையெழுத்திட்டார்.

கூட்டணி விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் சாதித்து வந்த மற்றொரு கட்சியான தேமுதிக, வியாழனன்று பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதானால் இவர்களது கூட்டணி தொடர்பான பல ஊகங்களுக்கும் தற்காலிகமான முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.