காணாமல்போன விமானத்தை தேடும் பணியில் இந்தியா உதவ முன்வந்துள்ளது

சல்மான் குர்ஷித்
Image caption இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்

239 பயணிகளோடு காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணிக்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது.

14 நாடுகளை சேர்ந்த பயணிகளுடன் பயணித்த இந்த போயிங் 777-200 இஆர் ரகத்தை சேர்ந்த விமானம், வியாட்நாம் நாட்டின் தெற்கு பகுதியில் பயணப் பாதையில் இருந்து திடிரென காணாமல் போனது.

திடீரென மாயமான இந்த விமானத்தை தேடும் பணியில் பன்னாட்டு குழுக்கள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வரும் சூழலில், விமானம் குறித்த உறுதி செய்யப்பட்ட தகவகள் எதுவும் இன்னமும் வெளிவராததால் பயணமாகிய பயணிகளின் உறவினர்கள் தொடர்ந்து பதட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பயணிகளின் உறவினர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதருடன் தான் தொடர்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் அனைத்து உதவிகளை செய்ய தயாராக உள்ளதாகவும், தேவையான தகவகள் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

காணாமல் போன இந்த விமானத்தில் 5 இந்திய பயணிகள் இருந்தனர் என்று ஏற்கனவே தெரியவந்திருந்தது.

இந்திய பயணிகளின் உறவினர்கள் இந்த விவகாரத்தில் மேலும் தகவலுக்காக காத்திருப்பதாக கூறினார்கள்.

சந்திரிகா ஷர்மா

காணாமல் போன இந்த விமானத்தில் பயணித்த சந்திரிகா ஷர்மா, சென்னையில் இருந்து இயங்கும் மீனவ தொழிலார்களுக்கான சர்வதேச ஆதரவு குழு அமைப்பில் பணிபுரிபவர், இவரை பற்றிய தகவலுக்காக காத்திப்பதாக அவரது சக பணியாளார் கார்த்திகேயன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த விமானம் மோசமான எந்த பிரச்சனையிலும் சிக்கி கொள்ளாமல் அதில் பயணித்த இவரது சக பணியாளர் சந்திரிகா ஷர்மா நலமுடன் திரும்ப பிராத்தனை செய்வதாகவும் அப்போது தெரிவித்தார்.

இந்த பயணி சந்திரிகா ஷர்மா மங்கோலியாவில் நடைபெறவுள்ள மாநாடு ஒன்றில் பங்கேற்க இதில் பயணமானார் என்றார் அவர்.

கிராந்தி ஷிர்சாத்

பயணித்த பயணிகளில் மற்றொருவரான கிராந்தி ஷிர்சாத் என்பவரின் உறவினர் ஒருவர் பேசுகையில், அந்த பெண்மணி சீனாவில் உள்ள தனது கணவரை சந்திக்க அதில் பயணமானார் என்றார்.

அந்த பெண்மணியின் உறவினரான கே.வி.ஷிர்சாத் மேலும் கூறுகையில், உலக மகளிர் தினத்தை அங்கு கொண்டாடவும், இன்னும் இரண்டு மாதத்தில் அவரது கணவர் இந்தியாவுக்கு திரும்பவுள்ளதால், இந்த இடைப்பட்ட நாளில் தனது விடுமுறையை அங்கு அவரது கணவருடன் களிக்க திட்டமிட்டு சென்றதாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அதைபோல் விமான பயணி கே.வி.ஷிர்சாதின் 16 வயது மகனான ராகுல் ஷிர்சாத், மற்றொரு செய்தி குறிப்பில் கூறும் போது காணாமல் போன இந்த விமானம் கடத்தப்பட்டிருக்கும் என்றும் ஆகையால் அது மீட்கப்பட்டு அவரது அம்மா மீட்கப்படுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

கொலேகர்

இதே சமயம் தந்தை, தாய் மற்றும் சகோதரர் என அதில் பயணத்தை தொடங்கிய மூன்று விமான பயணிகளின் வருகைக்காக பெய்ஜிங்கில் காத்திருக்கும் உறவினாரான சாம்வேத் கொலேகர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கூறுகையில் அவரது மனைவியுடன் இந்த மூவரின் வருகைக்காக நம்பிக்கையோடு காத்திருப்பதாக கூறினார்.

போலி ஆவணங்களுடம் இந்த விமானத்தில் பயணித்த இரண்டு பயணிகளின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த விமானம் பயணப் பாதையில் திரும்பியிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் ராடார் சிக்னல்கள் காட்டுவதாக மலேசிய விமானப்படை தலைவர் ரோத்ஸலி தாவுத் முன்னாத கூறினார்.

இந்தச் செய்தி குறித்து மேலும்