வைகோ மு க அழகிரி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"திமுகவில் காசு வாங்கிக்கொண்டு தொகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள்"

Image caption மு க அழகிரி வைகோ

தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பலர் காசு கொடுத்து தொகுதியை வாங்கியதாக திமுகவின் தலைவர் மு கருணாநிதியின் மகனும் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பவருமான மு க அழகிரி குற்றம் சாட்டினார்.

திமுக தலைவர் மு கருணாநிதியை வெறும் டம்மியாக வைத்துக்கொண்டு மு க ஸ்டாலின் தான் உண்மையில் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்றும் அழகிரி பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கும் முக அழகிரியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஞாயிறன்று அவரது வீட்டில் சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு குறித்து பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியிலேயே மு க அழகிரி இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார்.