ஆந்திரம்: கௌரவம் கருதி பெற்றோரே மகளைக் கொன்றனரா?

குடும்ப, ஜாதி கௌரவத்துக்காக கொலைகள் நடப்பதென்பது தெற்காசிய நாடுகளில் அதிகம்
Image caption குடும்ப, ஜாதி கௌரவத்துக்காக கொலைகள் நடப்பதென்பது தெற்காசிய நாடுகளில் அதிகம்

"குடும்ப அல்லது ஜாதி கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக என்ற காரணம் காட்டி செய்யப்படும் கொலை சம்பவம்" என்று காவல் துறையினரால் கூறப்படும் சம்பவம் ஒன்றில், இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் 26 வயது பெண் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர் ஒருவர் தனது வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தங்களின் விருப்பதிற்கு மாறாக திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் அவர்களின் பெண்ணை அவர்களே கொலை செய்ததாக தற்போது பொலிஸ் காவலில் இருக்கும் அந்த பெண்ணின் பெற்றோர் ஒப்புகொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 21ஆம் தேதி அன்று சக தகவல் தொழில்நுட்ப துறை ஊழியர் ஒருவரை அந்த பெண் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த பெண்ணின் கணவர் ஒரு பொருத்தமற்ற சமூகத்தை சேர்ந்தவர் என்று அந்த பெண்ணின் பெற்றோர்கள் கருதியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

"அந்த பெற்றோர்கள் இந்த குற்றத்தை ஒப்புகொண்டுள்ளனர். அந்த பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து அவரது கழுத்தை துப்பட்டாவால் நெருக்கியுள்ளனர்" என குண்ட்டூர் காவல் துறை அதிகாரி கோபிநாத் ஜாட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

அந்த பெண்ணின் வீட்டில் அழுத்தம் அதிகரித்தவுடன் அவர தனது நண்பரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். பெற்றோர்களை சமாதானப்படுத்த அந்த பெண் முயற்சி செய்து அவர்கள் ஒப்புகொள்ளவில்லை என்றும் காவல்துறை அதிகாரி கோபிநாத் ஜாட்டி தெரிவித்தார்.

ஹைதராபத்தில் அந்த பெண் திருமணம் செய்து கொண்டார். பின் ஒரு பாரம்பரிய திருமண விழா நடத்துவதாக கூறி அந்த பெண்ணை பெற்றோர்கள் அவரை குண்டூருக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து இந்த மணமகனின் நண்பர் ஒருவர் சந்தேகத்துடன் பெண்ணின் வீட்டிற்கு சென்ற பிறகே இந்த கொலை சம்பவம் வெளியே வந்தது, என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

குடும்ப அல்லது ஜாதி கௌரவத்தைக் காக்கவென்று நடக்கும் இதுபோன்ற கொலைகள் இந்தியாவின் தென்பகுதியில் நடப்பது அரிது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

அந்த பெண்ணின் பெற்றோர்கள் தரப்பிலிருந்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.