இந்திய மக்களவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு

வாக்குச்சாவடியில் பெண்கள் கூட்டம் படத்தின் காப்புரிமை AFP
Image caption வாக்குச்சாவடியில் பெண்கள் கூட்டம்

அஸ்ஸாம் மாநிலத்தில் ஐந்து தொகுதிகளிலும், திரிபுரா மாநிலத்தில் ஒரு தொகுதியிலும் என மொத்தம் 6 தொகுதிகளில், இந்தியாவில் நடைபெறும் பதினாறாவது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்துள்ளது.

திங்கட்கிழமை காலை இந்திய நேரப்படி 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணிக்கு வரையில் நடந்தது.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலின் வாக்கப்பதிவு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.

அதைபோல் இரு மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய திரிபுரா மாநிலத்தில் இருகட்டமாக இந்த மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதன்படி இன்று முதல் கட்டமாக அச்சம் மாநிலத்தின் தேஜ்பூர், கோலியாபார், ஜோர்ஹட், திப்ரூகர் மற்றும் லக்கிம்பூர் ஆகிய தொகுதிகள் உட்பட திரிபுரா மாநிலத்தின் மேற்கு தொகுதியிலும் திங்களன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

திரிபுரா மாநிலத்தின் மற்றொரு தொகுதியான கிழக்கு தொகுதியில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுத் தினமான ஏப்ரல் 12ம் தேதி நடைபெறுவதோடு அந்த மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெரும்.

அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

திரிபுரா மாநிலத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது.

மொத்தம் ஒன்பது கட்டங்களாக நடைபெறும் இந்த வாக்குப்பதிவு ஏப்ரல் 07 தொடங்கி மே மாதம் 12 தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இந்த அறிவிப்பின்படி ஏப்ரல் மாதத்தில் இன்று திங்கள்கிழமை 7ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், இரண்டாம் கட்ட வாக்கப்பதிவு நாளை மறுநாள் புதன்கிழமை ஏப்ரல் 9ம் தேதியும் நடைபெற்று தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் 10, 12, 17, 24, 30 ஆகிய தேதிகளிலும், அடுத்த மாதத்தில் நடைபெறும் எட்டாம் கட்ட வாக்குப்பதிவு மே மாதம் 7ம் தேதியும் மற்றும் கடைசி கட்டமாக ஒன்பதாம் கட்ட வாக்குப்பதிவு மே மாதம் 12ம் தேதி நடைபெற்று முடிவடையும்.

இந்தத் தேர்தலில் சுமார் 81.4 கோடி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த தேர்தலின்போது இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கையை விட சுமார் 10 கோடி புதிய வாக்காளர்கள் கூடுதலாக சேர்ந்திருக்கிறார்கள்.

வழக்கம் போல் இந்த முறையும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முதல்கட்டமாக நடைபெறும் இந்த ஆறு மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 1,605 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 12,46,794 வாக்களார்கள் உள்ளனர்.

இவ்வாறு வாக்குபதிவு நடைபெற்று நடைபெற்று வரும் இந்த மொத்த வாக்குச்சாவடிகளில், 2 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் 486 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நடைபெறும் இந்த தேர்தலுக்காக இந்திய சர்வதேச எல்லைகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுக்காப்பு வழங்கப்பட்டுள்ளது.