காஷ்மீர் மோதலில் 2 இந்தியப் படையினர் காயம்

காஷ்மீர் மோதலில் 2 இந்தியப் படையினர் காயம் படத்தின் காப்புரிமை
Image caption காஷ்மீர் மோதலில் 2 இந்தியப் படையினர் காயம்

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.

ஸ்ரீநகருக்கு கிழக்கே சில கிலோமீட்டர்கள் தொலைவில் ஒரு வீட்டில், பலமாக ஆயுதரித்த தீவிரவாதிகள் கூடியபோது, இராணுவ மற்றும் போலீஸ் பிரிவுகள் அவர்களுடன் சண்டையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறன்று பின்னேரம் ஆரம்பமான இந்தச் சண்டையில் 3 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.

ஞாயிறன்று இந்தப் பிராந்தியத்தின் வேறு ஒரு பகுதியில், இரு போலீஸ்காரர்களும், 2 தீவிரவாதச் சந்தேக நபர்களும் பலியான பின்னர் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.