காஷ்மீர்: மூன்று பேர் சுட்டுக்கொலை; தேர்தல் பாதுகாப்பு அதிகரிப்பு

காஷ்மீர் பொலிசார் (கோப்புப் படம்) படத்தின் காப்புரிமை AP
Image caption காஷ்மீர் பொலிசார் (கோப்புப் படம்)

இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீர்ல் இந்த வாரம் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கவுள்ள சூழ்நிலையில் அங்கு ஆயுததாரிகள் என சந்தேகிக்கப்படுவோரால் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்ரீநகருக்கு தெற்கே புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் கிராமத்துப் பெரியவர்கள் இருவரும் அடங்குவர்.

மக்கள் வாக்களிக்கச் செல்வதை தடுக்க வேண்டு என்பது இந்த கொலைகளின் நோக்கம் என்று பொலிஸ் கூறுகிறது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என காஷ்மீர பிரிவினை கோருவோர் குரல்கொடுத்துள்ளனர்.