நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் தரம்: அறிக்கை கோருகிறது உச்சநீதிமன்றம்

இந்திய உச்சநீதிமன்றம்
Image caption இந்திய உச்சநீதிமன்றம்

இந்தியாவில் உள்ள 41 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக மானியக்குழு ஆய்வு செய்து அவற்றின் தரம், உட்கட்டமைப்பு போன்ற விஷயங்கள் தொடர்பில் ஒரு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உட்கட்டமைப்பு வசதி இல்லாததால், 41 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்தானதை அடுத்து, அந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

அந்த மனுவின் நடந்த விசாரணையின்போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

இந்த 41 பல்கலைக்கழகங்களில் 17 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.