'கட்சியை பலவீனப்படுத்த வேண்டாம்' - ஞானதேசிகன் அறிக்கை

'கட்சியை பலவீனப்படுத்த வேண்டாம்' - ஞானதேசிகன் அறிக்கை
Image caption 'கட்சியை பலவீனப்படுத்த வேண்டாம்' - ஞானதேசிகன் அறிக்கை

கட்சி விவகாரங்களிலும் தன் மீதும் ஏதும் தவறுகள் இருந்தால் அதனை காங்கிரஸ் தலைமையிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிக்கைகளின் மூலமாக கட்சியைப் பலவீனப்படுத்தும் முயற்சி வருத்தத்திற்குரியது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவிலும் தமிழகத்திலும் தோல்வியைத் தழுவியது. இதற்கான காரணங்களை கட்சிக்குள் பேச வேண்டும்'' என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கட்சியினர் அனைவரையுமே தான் சமமாக நடத்திவந்திருப்பதாகவும் கடந்த 29ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை மனதிற்கு வருத்தமளிப்பதாகவும் அவர் தெரித்துள்ளார்.

முதலில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒட்டுமொத்த நிர்வாகிகளின் கருத்து அல்ல என்பதை வெளிப்படுத்துவதற்காகவே வேறு மாநில நிர்வாகிகளும் மாவட்டத் தலைவர்களும் பதில் அறிக்கை வெளியிட்டதாக ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

இனிமேல் கட்சி விவகாரங்களையும் நிறை-குறைகளையும் நேரடியாகத் தலைமையிடம் தெரிவிக்கும்படியும் பத்திரிகைகள் வாயிலாக அறிக்கை வெளியிட வேண்டாம் என்றும் அவர் கட்சியினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.