உ.பி.: மரத்தில் தொங்கிய யுவதி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகவில்லை

இறந்த யுவதியின் தாயார் இழப்பால் வாடுகிறார். படத்தின் காப்புரிமை AFP
Image caption இறந்த யுவதியின் தாயார் இழப்பால் வாடுகிறார்.

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் வியாழனன்று மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டிருந்த பதின்ம வயது யுவதி பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டதாகத் தெரியவில்லை என இந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமையன்று காணாமல்போன இந்த யுவதி பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என இவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அந்த யுவதியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில் பாலியல் வல்லுறவுக்கான அடையாளம் எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

இறந்தவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்.

இரண்டு வாரங்களுக்கும் முன்புதான் பதாவுன் என்ற மாவட்டத்தில் இரண்டு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மாமரம் ஒன்றில் தொங்கவிடப்பட்டிருந்தனர்.

கடந்த புதன்கிழமை பாரெய்ச் என்ற மாவட்டத்தில் ஒரு பெண் மரத்தில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டிருந்தார்.