இராக்கில் தொடரும் தாக்குதல்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இராக்கில் சிக்கியுள்ள இந்தியச் செவிலியர் மெரீனா பேட்டி

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இராக்கில் மோதல்கள் வலுத்து வருகின்றன

வன்முறை மோதல்கள் உக்கிரமடைந்துவரும் இராக் நாட்டில் குறைந்தது 200 இந்தியர்கள் சிக்கியிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஸ் தலைமையிலான ஆயுதக் குழு கைப்பற்றிய திக்ரித் என்ற நகரின் மருத்துவமனை ஒன்றில் பணி புரியும் 46 இந்திய செவிலியர்களும் இதில் அடங்குவர்.

கடந்த 24 மணி நேரமாக தங்களுக்கு மிச்சமான பழைய உணவு தான் கிடைப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பாதுக்காப்பான சூழலில் அங்கு தங்கியுள்ள போதும் வெளியில் செல்ல முடியாமல் முடங்கியுள்ளதாக பிபிசி தமிழோசையிடம் பேசிய போது தெரிவித்தனர்.

கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் அளிக்கப் படவில்லை என்று கூறிய அவர்கள், அந்நாட்டு அரசாங்கம் அதற்கு பொறுபேற்க முடியாது என்று கூறியுள்ளதால் வருத்தம் அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அங்குள்ள 46 இந்திய செவியலர்களில் 13 பேர் சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்புவதால், அதற்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளும்படி அரசாங்கத்திடம் முறையிட்டுள்ளதாக அவர்களில் ஒருவரான செவிலியர் மெரினா கூறினார்.