கோதுமைக் கதிர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியாவில் பிறந்தவருக்கு உலக உணவுப் பரிசு

படத்தின் காப்புரிமை cimmyt.org
Image caption டாக்டர் சஞ்சய ராஜாராம்

இந்த ஆண்டுக்கான உலக உணவுப் பரிசு இந்தியாவில் பிறந்து, மெக்ஸிகோ குடியுரிமை பெற்றுள்ள டாக்டர் சஞ்சய ராஜாராமுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோதுமை ஆராய்ச்சியில் பல சாதனைகளை படைத்து, வளர்ந்து வரும் பல நாடுகள் தமது உணவுத் தேவைகளை சமாளிக்க பெரும் பங்காற்றினார் என்று வருது வழங்கும் அமைப்பு கூறியுள்ளது.

இதுவரை அவர் சுமார் 500 புதிய கோதுமை ரகங்களை உற்பத்தி செய்துள்ளார் என்றும், விவசாய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கூடாது என தொடர்ச்சியாக வாதிட்டு வருவதாக, அவருடன் சில ஆண்டுகள் இணைந்து பணியாற்றியவரும், அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளவருமான வெங்கட்ரமணி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

டாக்டர் சஞ்சய ராஜாராமின் பங்களிப்பு குறித்து வெங்கட்ரமணியின் பேட்டியை இங்கே கேட்கலாம்.