33 திமுக முக்கியஸ்தர்கள் இடைநீக்கம்

33 திமுக முக்கியஸ்தர்கள் இடைநீக்கம்
Image caption 33 திமுக முக்கியஸ்தர்கள் இடைநீக்கம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டில் அந்தக் கட்சியை சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், 3 மாவட்டச் செயலாளர்கள் உட்பட 33 முக்கிய பதவியில் உள்ளவர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்த கட்சியின் குழுவின் பரிந்துரையின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரான கருணாநிதி அவர்கள், அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பிட்ட ஒரு வாரகாலத்துக்குள் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு, அவர்கள் உரிய பதில் தராவிட்டால், அவர்கள் கட்சியில் இருந்து முழுமையாக நீக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.

கே.பி. ராமலிங்கமே இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராவார்.

தஞ்சை மாவட்ட செயலாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தர்மபுரி தெற்கு மாவட்ட செயலாளரான வ. முல்லைவேந்தன், தர்மபுரி வடக்கின் செயலாளரான பெ. இன்பசேகரன் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் அடங்குகிறார்கள் .