சென்னை கட்டிட விபத்து: மேலும் பலர் பலி

  • 2 ஜூலை 2014
படத்தின் காப்புரிமை AP
Image caption இந்தக் கட்டிட விபத்து கடந்த சனிக்கிழமை ஏற்பட்டது

சென்னை புறநகர்ப் பகுதி ஒன்றில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

அந்த விபத்தில் இதுவரை 42 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள் என்று, சம்பவ இடத்துக்கு சென்றுவந்த செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

உயிரிழந்தவர்களில் 14 பேர் பெண்கள் என்றும், இதர 28 பேர் ஆண்கள் எனவும் அதிகாரிகள் கூறுவதாக அந்தச் செய்தியாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அதையடுத்து மேலும் பலர் உயிருடனோ அல்லது சடலமாகவோ மீட்கப்படக்கூடும் எனவும் நம்பிக்கைகள் அதிகரித்துள்ளதாக, அப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.