திருடு கொடுத்த பாஜக எம் பி மீது விசாரணை

கிரிராஜ் சிங் படத்தின் காப்புரிமை pti
Image caption தேர்தல் ஆணையத்திடம் இவர் காட்டிய சொத்துக் கணக்கின் அளவை விட அதிக பணம் இவர் வீட்டில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படுகிறது

இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான கிரிராஜ் சிங்குடைய வீட்டில் திருடியதாக குற்றம்சாட்டப்படும் நபரிடம் இருந்து பெருமளவான ரொக்கப்பணமும் கோடிக்கணக்கான ரூபாய் பெருமதி கொண்டசொகுசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், கிரிராஜ் சிங்கை பொலிசாரும், வரித்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

பிஹார் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவரான கிரிராஜ் சிங், தனது வீட்டில் நடந்த திருட்டில் ஐம்பது ஆயிரம் ரூபாய் அளவுக்கு கொள்ளை போய்விட்டதாக புகார் தெரிவித்திருந்தார்.

ஆனால் கொள்ளையடித்ததாக குற்றம்சாட்டப்படும் நபரைப் பிடித்தபோது அவரிடம் இருந்து ஒருகோடியே இருபது லட்சம் வரையான ரொக்கப் பணமும், பெருமளவான தங்க நகைகளும், உயர் ரக கைக்கடிகாரங்கள் ஏழும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தேர்தலுக்கு முன்னர் கிரிராஜ் சிங் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்த சொத்துக் கணக்கில், குறைவான சொத்து இருப்பதாக கணக்கு காட்டியிருந்தார்.

அவர் வீட்டில் பெருந்தொகை இருந்ததை வைத்தே அந்தப் பணம் அவருடையதுதான் என்று கூறிவிட முடியாது என அவரது கட்சி சகாக்கள் கூறுகின்றனர்.