ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“சிபிஎஸ்இ பள்ளிகளுக்குத் தேவை ஆங்கிலமே தவிர சமஸ்கிரதமல்ல”

இந்தியாவில் மத்திய அரசின் கீழ் செயற்படும் சி பி எஸ் இ என்றழைக்கப்படும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் தன் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்துப்பள்ளிகளிலும் சமஸ்கிருத மொழியை பரப்பும் நோக்கிலான சமஸ்கிரத வாரம் கடைபிடிக்கும்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறது.

சமஸ்கிரத வாரம் கொண்டாடும்படி வந்திருக்கும் இந்த சுற்றறிக்கை தேவையற்ற ஒன்று என்கிறார் டில்லியில் இருக்கும் சிபிஎஸ்ஸி பள்ளிகளில் ஒன்றான தமிழ்கல்விக்கழக மேல் நிலைப்பள்ளியின் முதல்வர் வி மைதிலி.

தங்கள் பள்ளியைப்போல அரசு உதவியில் நடத்தப்படும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அவசியமான தேவை என்பது ஆங்கில மொழிப்புலமையை அதிகரிப்பதற்கான உதவிகள் தானே தவிர சமஸ்கிரத மொழியை பரப்புவதற்கான விளம்பர அறிவிப்பல்ல என்கிறார் அவர்.

தனியாரால் நடத்தப்படும் சி பி எஸ் இ பள்ளிகளில் கிடைக்கும் ஆங்கில மொழி கற்பித்தல் வசதிகள் தம்மைப்போன்ற அரசு உதவியில் நடக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கிடைப்பதில்லை என்று கூறும் மைதிலி, அரசின் கவனமும் உதவியும் ஆங்கில மொழிக்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் செலுத்தப்பட்டால் மாணவ மாணவிகள் பயனடைவார்கள் என்கிறார் அவர்.