ஊழலை வெளிப்படுத்துவோருக்கு பாதுகாப்பு: இந்திய நாடாளுமன்றத்தில் தகவல்

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption ஊழலை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பு: நாடாளுமன்றத்தில் தகவல்

முறைகேடுகளுக்கு எதிராக குரல்கொடுப்பவர்களும் ஊழல் முறைகேடுகளை வெளிப்படுத்துபவர்களும் அரசின் மூலம் பாதுகாப்புப் பெறலாம் என்று செவ்வாய்கிழமையன்று இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்களவையில் இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ள பதிலில், இது தொடர்பான நடவடிக்கைகளை அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் தலைமை கண்காணிப்பு அதிகாரிகள் மேற்கொள்வாரகள் என்று கூறியுள்ளார். இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகள், புகார் வழங்கியோர் மற்றும் தகவல் தெரிவித்தவர்களுக்கு பாதுக்காப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்கான வழிக்காட்டுதல்களை தருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இதற்கான முகவர்கள் துறை வாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் குறித்தான தகவல் அளிப்போருக்கு மிரட்டல் விடுக்கப்படும் சூழலில், இது தொடர்பாக பாதிப்புக்குள்ளானவர்கள் சம்பந்தப்பட்ட முகவரிடம் தெரிவிக்கலாம் என்றும் பின்னர் அந்த முகவர்கள் இது தொடர்பில் தலைமை கண்காணிப்பு அதிகாரிகளிடம் தெரிவித்து சம்பந்தப்பட்டவரின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.