ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மது அருந்துவோரின் உரிமைக்குரலும்; மதுவிலக்கு கோருவோரின் நியாயங்களும்

தமிழ்நாட்டின் மதுபானம் குடிப்பவர்களின் உரிமைகளுக்கான புதிய அமைப்பு ஒன்று தூத்துக்குடியில் துவங்கப்பட்டிருக்கிறது. மது அருந்துவோர் பாதுக்காப்பு நல சங்கம் என்கிற இந்த சங்கத்தின் நோக்கம், மது அருந்துவோர் நலன்களை வலியுறுத்துவது; மது அருந்துபவர்கள் தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பது ஆகியவை என்கிறார் அந்த அமைப்பின் தலைவர் பால்ராஜ்.

அதேசமயம் மது அருந்துவோர் பாதுக்காப்பு நல சங்கத்தின் தலைவர் பால்ராஜின் நியாயங்கள் சமூகத்தை சீர்கெடுக்கும் என்கிறார் இந்தியா முழுவதும் மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் காலவரையற்ற உண்ணா விரதம் மேற்கொண்டுள்ள சசிபெருமாள். தனி மனிதனுக்கு கேடு பயக்கும், குடும்பங்களையும் சமூகத்தின் அமைதியையும் ஒரு சேர குலைப்பது மதுபானம் என்கிறார் அவர்.

பிபிசி தமிழோசைக்கு இவர்கள் இருவரும் அளித்த பிரத்யேக பேட்டிகளின் விரிவான ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.