இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கையில் போராட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

படிப்படியாக இழுவை வலையை கைவிடத் தயார் : தமிழக மீனவர்கள்

படத்தின் காப்புரிமை spl arrangement
Image caption ராமேஸ்வரம் மீனவர்கள்

மத்திய, மாநில அரசின் முழுமையான உதவிகள் கிடைத்தால், இழுவை வலைப் பயன்பாட்டை முற்றாகக் கைவிட்டு ஆழ்கடல் மீன்பிடிக்கு செல்லத் தயார் என தமிழக மீனவர்கள் கூறுகிறார்கள்.

இந்திய இலங்கைக் கடற்பரப்பில், மீன்பிடிப்பது தொடர்பில், இரு நாட்டு மீனவர்கள் மற்றும் அரசுகளுக்கு இடையே பல்லாண்டுகளாக இருக்கும் உரசல்கள் மற்றும் மனக்கசப்புகளை களையும் நோக்கில், மத்திய மாநில அரசுகளிடன் மாற்று உபாயங்களுக்கான ஆலோசனைகளும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன என்று, இந்திய தேசிய மீனவர் பேரவையின் தலைவர் இளங்கோ பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இழுவை வலையை பயன்படுத்துவதால் கடல்வளம் அழிந்து போகிறது என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதாகவும், வேறுவகை மீன்பிடி முறைகளுக்கு மாற தாங்கள் மனதளவில் தயாராகி வருவதாகவும் அவர் கூறுகிறார்.

மத்திய அரசிடம் 500 கோடி ரூபாய்கள் அளவுக்கு மானியத்துடன் கூடிய, கடன்களை தாங்கள் கோரியுள்ளதாகவும், அது ஆக்கபூர்வமாக பரிசீலிக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தங்களிடம் தெரிவித்ததாகவும் இளங்கோ கூறுகிறார்.

அவ்வகையில் அரசின் உதவிகள் எதிர்பார்க்கும் வகையில் கிடைத்தாலும் கூட, இழுவை வலைப் பயன்பாட்டை கைவிடுவது தொடங்க ஆறு மாதமும் முற்றாக நிறுத்த மூன்று வருடங்கள் ஆகும் என இளங்கோ தெரிவித்தார்.

தமது தரப்பு இழுவை வலையை கைவிடுவது தொடர்பிலான பிரேரணைகள் இலங்கை மீனவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் அதை முற்றாக நம்ப மறுத்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் இளங்கோ பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியை இங்கே கேட்கலாம்.