ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“தமிழக குண்டர் தடுப்புச்சட்ட மாற்றம் தனிநபர் உரிமையை பாதிக்கும்”

தமிழக அரசின் தடுப்புக் காவல் சட்டமான குண்டர் தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது. அதன் படி ஒரே ஒருமுறை குற்றம் புரிந்தவர்கள் கூட ஒரு ஆண்டு காலம் வரை தடுப்பு காவலில் வைக்கும் அதிகாரம் காவல் துறையினருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அந்த சட்டத்தில் கொண்டுவந்திருக்கும் புதிய திருத்தங்களின்படி ‘சைபர் கிரைம்’ எனப்படும் இணைய குற்றங்கள் புரிபவர்கள் கூட குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்திருப்பது இணைய சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறும் ஆபத்திருப்பதாக இணைய சுதந்திரத்திற்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் குரல்கொடுக்கும் செயற்பாட்டளர்கள் அச்சம் வெளியிட்டிருக்கிறார்கள்.