இந்திய மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை ஜனாதிபதி உத்தரவு

படத்தின் காப்புரிமை gosl
Image caption டிவிட்டரில் விடுதலை அறிவிப்பு

எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று கொண்டாடப்படும் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைக் காவலில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷ உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு சமூக வளைதளமான ட்விட்டரில் உள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. எனினும் எத்தனை மீனவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்ற எணிக்கையை அந்த அறிவிப்பு குறிப்பிடவில்லை.

இலங்கை சிறையில் இதுவரை 94 தமிக மீனவர்கள் இருப்பதாகவும் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 62 விசைப்படகுகளும் இலங்கை அதிகாரிகள் பாதுகாப்பில் இருப்பதாகவும் கூறி மீனவர்களையும் அவர்களின் படுகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீனவர் பிரச்சனை குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதிய கடிதங்களை முன்வைத்து சர்ச்சைக்குரிய விதத்தில் ஒரு கட்டுரையை இந்த மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்தது.

பின்னர் அதற்கு மன்னிப்பும் கோரியது என்பதும் குறிப்பிடதக்கது.