யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார் காலமானார்

படத்தின் காப்புரிமை AFP
Image caption காலமானார் ஐயங்கார்

உலகின் முன்னணி யோகா குருக்களில் ஒருவரான பி.கே.எஸ் ஐயங்கார் இன்று மாரடைப்பால் இந்தியாவில் காலமானார். அவருக்கு வயது 95.

யோகா பயிற்சி மற்றும் தத்துவம் குறித்த பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். அவரது சொந்த பாணி யோகாவான ஐயங்கார் பாணி யோகாவை நிறுவி பின் அதை அவரது தாய்நாடான இந்தியாவிலும் உலகெங்கிலும் பிரபலப்படுத்தியதற்காக அவர் பாராட்டப்பட்டார்.

நவீன யோகா கலையின் தந்தை என்று அழைக்கப்படும் திருமலை கிருஷ்ணாமாச்சாரியாவின் ஆரம்ப கால மாணவர்களில் ஒருவராக ஐயங்கார் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த 2004 ஆம் ஆண்டில் டைம் இதழ் வெளியிட்ட உலகில் மிகவும் செல்வாக்கு மிகுந்த 100 பேர்களில் ஒருவராக ஐயங்காரின் பெயர் இடம்பெற்றது.