'ஐஸ்' பக்கெட்டுக்குப் பதிலாக 'ரைஸ்' பக்கெட் சவால்

படத்தின் காப்புரிமை Tasnim
Image caption இல்லாதவர்களுக்கு அரிசி கொடுப்பது ரைஸ் பக்கெட் சவாலின் நோக்கம்

உலகெங்கிலும் பிரபலமடைந்துள்ள ஐஸ் பக்கெட் சவாலுக்குப் ("Ice Bucket challenge") பதிலாக இந்திய ஊடகவியலாளர் ஒருவர் 'ரைஸ் பக்கெட் சவால்' ("Rice Bucket challenge") என்ற புதிய விழிப்புணர்வுத் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

ஐஸ் பக்கெட் சவாலில் ஒருவர் தனது தலையில் ஐஸ்- குளிர் நீரை ஊற்றிக் கொண்டு இன்னொருவருக்கு சவால் விடுப்பார்.

நரம்பு சம்பந்தப்பட்ட ஏஎல்எஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, அந்த நோய் தொடர்பான தொண்டு நிறுவனத்திற்கு நிதி சேகரிப்பதே ஐஸ் பக்கெட் சவாலின் நோக்கம்.

இப்போது மஞ்சு லதா கலாநிதி என்ற பெண் தொடங்கியுள்ள ரைஸ் பக்கெட் சவால் மூலம், வசதி இல்லாத ஒருவருக்கு ஒரு வாளி அரிசி கொடுக்க வேண்டும்.

இந்த செய்தி தற்போது ஊடகங்களில் வேகமாக பரவிவருகின்றது.

இதுவரை எத்தனை வாளி அரிசி தானம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் பெரும்பாலானவர்கள் வறுமையில் வாடுகின்றனர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி தம்மை வந்தடையவில்லை என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

இந்தச் செய்தி குறித்து மேலும்