காமாத்கிரி கோயிலில் கூட்டநெரிசல்; 10 பேர் பலி, பலர் காயம்

படத்தின் காப்புரிமை AP
Image caption இந்தியாவில் கோயில் கூட்ட நெரிசலில் மக்கள் பலியாகின்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்துவருகின்றன

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றான காமாத்கிரி மலைக் கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

சித்ரகூட் பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாட்டின்போது இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

திடீர் கூட்டநெரிசல் ஏற்பட்டமைக்கான தெளிவான காரணம் இன்னும் தெரியவில்லை.

மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த கம்பியொன்று மக்கள் மீது அறுந்துவிழுந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக போடப்பட்டிருந்த கயிற்றுத் தடைகளும் மக்கள் பீதியடையக் காரணமாகியுள்ளது.