பிரிந்து போகாமல் இருந்தால் ஸ்காட்லாந்துக்கு மேலும் அதிகாரங்கள் --தலைவர்கள் உறுதி

படத்தின் காப்புரிமை Getty
Image caption கூடுதல் அதிகாரங்கள் --மூன்று கட்சிகள் உறுதிமொழி

பிரிட்டனின் மூன்று பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஸ்காட்லாந்து மக்கள் வியாழனன்று நடக்கவுள்ள சுதந்திரம் குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிந்து போவதற்கு எதிராக வாக்களித்தால், ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்துக்கு மேலும் பரவலான புதிய அதிகாரங்கள் தரப்படும் என்று உறுதியளிக்கும் ஆவணம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

பிரிட்டனின் வளங்களை சமமாகப் பகிர்ந்துகொள்வது மற்றும் ஸ்காட்லாந்துக்கு அதன் சுகாதாரச் சேவை மீது முழு நிதிக் கட்டுப்பாட்டைத் தருவது ஆகியவை இதில் அடங்கும்.

ஆனால் ஸ்காட்லாந்துக்கு சுதந்திரம் கோரும் தரப்போ, ஸ்காட்லாந்து அனைத்து அதிகாரங்களையும் பெற ஒரே உத்தரவாதம் அது சுதந்திரம் பெற வாக்களிப்பதுதான் என்று கூறுகிறது.