“மாண்டலின் மந்திரவாதி”: ஸ்ரீநிவாஸின் ஆளுமையும் பங்களிப்பும்

பட மூலாதாரம், thehindu
'மாண்டலின்' ஸ்ரீநிவாஸ்
இந்தியாவில் அதிகம் அறியப்படாத ஒரு வாத்தியத்தை தனது அதியற்புதமான திறமையினால் உச்சத்துக்கு எடுத்துச் சென்ற ஒரு பிறவிக் கலைஞரின் இசை இன்று அடங்கியது.
ஸ்ரீநிவாஸ் என்பதை விட மாண்டலின் ஸ்ரீநிவாஸ் என்று இசை உலகம் அறிந்த அந்தக் கலைஞர் தமது 45 ஆவது வயதில், அறுவை சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
ஆறு வயதில் மாண்டலினை பழக ஆரம்பித்த அவர், இந்தியாவில் அந்த வாத்தியத்தின் ஒரு முகமாகத் திகழ்ந்தார் என்பது உண்மை.
கர்நாடக இசைக்கே உண்டான நெளிவு சுளிவுகளை மிகவும் லாவகமாக அவர் மாண்டலினில் கையாண்டார்.
மேற்கத்திய வாத்தியமான மாண்டலினை, தன்வசப்படுத்தி அதை இந்திய சாஸ்திரிய இசைக்கு ஏற்றவகையிலும் மாற்றியமைத்த பெருமை ஸ்ரீநிவாஸுக்கு உண்டு.
அவரது இசையில் ‘தெய்வீகம் நிறைந்திருக்கும்’ என்று பிபிசி தமிழோசையிடம் கூறினார், அவருடன் பல ஆண்டுகள் பக்கவாத்தியம் வாசித்த வி வி ஸ்ரீநிவாச ராவ்.
கர்நாடக இசையில் மட்டுமல்லாமல், மேற்கத்திய இசை மற்றும் வட இந்திய இசையிலும் அவருக்கு நல்ல புலமை இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.
மறைந்த யூ ஸ்ரீநிவாஸின் ஆளுமை மற்றும் பங்களிப்பு குறித்த ஒரு பெட்டகத்தை இங்கே கேட்கலாம்.