மங்கள்யான் : அடுத்தது என்ன? - செவ்வி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மங்கள்யான் : அடுத்தது என்ன? - செவ்வி

செவ்வாய் கிரகத்தை ஆராய செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலனை செலுத்த இந்தியா மேற்கொண்ட முதல் முயற்சி வெற்றியடைந்துள்ளது. பூமியிலிருந்து தொடங்கிய பத்து மாதப் பயணத்திற்கு பிறகு இன்று புதனன்று 'மங்கள்யான்' என்ற செயற்கை விண்கலன் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்தது.

மங்கள்யானை செவ்வாயின் சுற்றுப் பாதையில் இணைப்பதற்காக, எஞ்சின்களை இயக்கி, வேகத்தை மட்டுப்படுத்தும் பணிகள் இந்திய நேரப்படி காலை 7.17 மணிக்குத் துவங்கின. அப்போது லிக்விட் அபோஜி மோட்டார் எனப்படும் எஞ்சினும் 8 சிறிய எஞ்சின்களும் இயக்கப்பட்டன. 24 நிமிடங்களுக்கு இவை இயக்கப்பட்டு, மங்கள்யானின் வேகம் குறைக்கப்பட்டது. சரியாக காலை 7.59 மணிக்கு மங்கள்யான் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் இணைந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

மங்கள்யான் விண்கலன் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்து என்ன என்று இஸ்ரோவின், தொலைத்தொடர்பு மற்றும் செயற்கை கோள்களை கண்காணித்து கட்டளைகள் பிறப்பிக்கும் பிரிவின் துணை இயக்குநர் பிச்சைமணி அவர்களின் செவ்வி.