இந்திய-பாகிஸ்தான் மோதலால் பலியாகும் பொதுமக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய-பாகிஸ்தான் மோதலால் பலியாகும் பொதுமக்கள் -காணொளி

காஷ்மீர் பிராந்தியத்தில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையில் மேலும் ஷெல் தாக்குதல்கள் நடந்துள்ளன.

கடந்த பல வருடங்களில் இந்த இரு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் மோசமான மோதலாக இது பார்க்கப்படுகின்றது.

பெரும்பாலும் பொதுமக்கள் அடங்கலாக இரு பக்கத்திலும் சுமார் 16 பேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பக்ரீத் பண்டிகை காலத்தில் இந்த ஷெல் தாக்குதல்கள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளும் தாக்குதல் குறித்து ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றன.

இவை குறித்து பிபிசியின் செய்தியாளர்கள் இரு நாடுகளிலும் இருந்து அனுப்பிய காணொளி.