காஷ்மீர் மோதல்கள்: இந்தியா-பாக். ஒன்றுக்கொன்று எச்சரிக்கை

காஷ்மீரில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான எல்லையில் கடந்த நான்கு நாட்களாக இருநாட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதல்களில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியா பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption இருநாட்டுப் படையினர் இடையிலான துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்

பாகிஸ்தான் விளையாட்டு காட்டுகிறது என்று குறிப்பிட்டு, இனிமேலும் பாகிஸ்தான் அதைச் செய்யுமானால், அது தாங்கிக்கொள்ள முடியாத விலைகொடுக்க நேரிடும் என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெய்ட்லி தெரிவித்துள்ளார்.

ஆனால் எல்லையில் ரோந்துப் பணி செய்யும் பாகிஸ்தான் படைப்பிரிவுக்கான தலைவர் மேஜர் ஜெனரல் ஜாவேத் கான், இந்தியா எதற்காக தம்மை நோக்கிச் சுடுகிறது என்று தமக்கு விளங்கவே இல்லை என்று கூறினார்.

தாக்குதலை இந்தியா தொடருமானால், பாகிஸ்தானிடம் இருந்து ஒரு பெரிய பதிலடியை அது சந்திக்க எதிர்கொள்ள நேரிடும் என ஜாவேத் கான் எச்சரித்துள்ளார்.